கனடாவில் இயங்கும் ‘சம்யுக்தா’ நிறுவனத்தின் சர்வதேச விருது விழாவில் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை இலங்கையைச் சேர்ந்த புத்தளம் மரிக்கார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இவ்விருது விழா கனடா டொரோன்டோவில் கடந்த 24ஆம் திகதி நகரில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
சர்வதேச ரீதியில் ‘தெரிவு,பொதுமக்கள் வாக்களிப்பு, மீள் தெரிவு’ ஆகிய மூன்று நிபந்தனைகளின் கீழ் பல சுற்றுக்களில் இடம்பெற்ற இப்போட்டியில் சிறந்த பாடலாசிரியருக்கான விருது ‘புத்தளம் மரிக்காருக்கு வழங்கப்பட்டது.
இதன்போது விருதுக்காக, உலகம் முழுதும் இருந்து வாக்களித்த நண்பர்கள், உறவுகள் குறிப்பாக புத்தளம் உறவுகள், Puttalam Online குழுமம், SL Politics குழுமம், UK, Qatar நண்பர்கள் வட்டம், அலுவலக நண்பர்கள், உட்பட அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.
விருது பெறும் புத்தளம் மரிக்காருக்கு ‘NewsNow’ இன் மனமார்ந்த வாழ்த்துக்கள்.