காஸா பகுதிக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 55 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 186 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் வாழும் இடங்களில் இந்த தாக்குதல் நடப்பதால், அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்.
மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள நிலையில், காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை கிடைக்காத நிலைமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூர சம்பவத்தை எதிர்த்து பல்வேறு சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.