ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பில் கட்சிக்குள் கடும் கருத்து மோதல்கள் நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவை கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருந்தது.
அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியில் இன்னும் 4 தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது தேசியப் பட்டியல் உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.