புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் நியமனமான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் இன்று கலந்து கொண்டார்.
நாடாளுமன்றத்திற்கு வருகை தந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரவி கருணாநாயக்க, தேசிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக தனது நியமனம் சட்டபூர்வமானது என தெரிவித்தார்.
இந்த விடயம் ஒரு சிலருக்கு மாத்திரமே பிரச்சினை என்றும் முழு கட்சியினருக்கும் பிரச்சினை இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்தார்.