இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்தும் தேசிய ரீதியான அல்குர்ஆன் மனனப் போட்டி திர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் நடாத்தப்படவுள்ளன.
இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனப் போட்டியினை இரண்டாவது தடவையாக நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளன.
இப்போட்டிகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரபுக் கல்லூரிகள், ஹிப்ழுல் குர்ஆன் மத்ரஸாக்கள் மற்றும் அரச பாடசாலைகள் அல்லது அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களை மையப்படுத்தி ஆண், பெண் இரு பாலாருக்கும் நான்கு பிரிவுகளாக நடாத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறும் போட்டியாளர்கள் சவூதி அரசாங்கத்தினால் பெறுமதியான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுவர்.
மேற்படி போட்டியில் பங்குபற்றுவதற்கு தகுதியான போட்டியாளர்களை தெரிவு செய்யும் ஆரம்பகட்டப் போட்டி 2024 டிசம்பர் மாத ஆரம்பப் பகுதியில் பிராந்திய ரீதியாக நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போட்டி நிபந்தனைகள்:
1. இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
2. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அரபுக் கல்லூரி, ஹிப்ழ் குர்ஆன் மத்ரஸா, அரச பாடசாலைகள் அல்லது அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கல்வி கற்பவராக இருத்தல்.
3. ஒரு போட்டியாளர் ஒரு பிரிவில் மாத்திரமே கலந்துகொள்ள முடியும்.
4. போட்டியாளர்கள் ஏதாவது ஒரு சர்வதேச போட்டியில் ஏற்கனவே கலந்துகொள்ளாதவராகவும், கடந்த 2023 ஆம் ஆண்டு சவூதி தூதரகத்தால் நடாத்தப்பட்ட போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெறாதவராகவும் இருத்தல் வேண்டும்.
5. விண்ணப்பதாரிகளின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச் சீட்டின் சான்றுப் பிரதிகள். மேலும், அடையாள அட்டை இல்லாதவர்கள் 2″X2″ அளவிலான புகைப்படத்தின் பின்பக்கத்தில் பெயர், முகவரி என்பவற்றை குறிபிட்டு கல்லூரி அதிபர் மூலம் அத்தாட்சிப்படுத்தி போட்டியின் போது சமர்ப்பித்தல் வேண்டும்.
6. 2025.01.11 ஆம் திகதியில் போட்டிப்பிரிவுக்குரிய வயது கணிக்கப்படும்.
7. போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படமாட்டாது.
8. போட்டி முடிவுகள் தொடர்பாக நடுவர்களின் தீர்மானமே இறுதியானதாகும்.
9.போட்டியாளர்கள் திணைக்களத்தின் விதிகளை மீறும் பட்சத்தில் போட்டியில் பங்குபற்றும்
தகைமையை இழந்தவராக கருதப்படுவர்.
10. ஜனவரி மாதம் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு பிராந்தியத்தில் இருந்து தெரிவு செய்யபப்டும் போட்டியாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.
11. பிராந்தியங்களில் இருந்து தெரிவுசெய்யப்படும் போட்டியாளர்களின் எண்ணிக்கையை இத்திணைக்களமே தீர்மானிக்கும்.
விண்ணப்பங்களை google form ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும். Google link
https://forms.gle/qCyTBChMCGxwTyDV7໑ போட்டியில் கலந்து கொள்ளும் அன்றைய தினம் சமர்பித்தல் வேண்டும். (Hard copy)
குறிப்பு: தபால் மூலம் அல்லது நேரடியாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள்
விண்ணப்ப முடிவுத் திகதி: 2024.11.30.