சவூதி அரேபியாவின் றியாத் நகரில் காத்தான்குடி சமூகத்தின் (KCSA) வின்டர் ஒன்றுகூடல், (winter gathering) நேற்று (1) மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் றியாத், அல்ஹஸா, தமாம் போன்ற பிரதேசங்களில் வாழும் KCSA உறுப்பினர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல்.அமீர்அஜ்வத் அவர்கள் கலந்து கொண்டார். அவரை கௌரவிக்கும் விதமாக, பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக, முன்னணி வைத்திய நிபுணர் Dr. Fareed, MBBS(SL), MD(COL), MRCP(UK), FRCP(LON), FCCP(COL) ஆகியோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.