சீரற்ற காலநிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பரீட்சாத்திகளுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவினரால் விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக கிழக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற கால நிலைக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை( 25) கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 9583 பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். அதில் 7221 பாடசாலை பரிச்சாதிகளும், 2361 பேர் தனியார் பரிட்சாத்திகளாவர். மாவட்டத்தில் 69 பரீட்சை நிலையங்களும் 8 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் நிலவும் சீரற்ற கால நிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பட்டிருப்பு மற்றும் கல்குடா கல்வி வலையங்களைச் சேர்ந்த சில மாணவர்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக்கு குழுவினரால் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.