ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு தீர்ப்பு டிசம்பர் 12 வரை ஒத்திவைப்பு!

Date:

பொது­பல சேனா அமைப்பின் தலைவர் கல­கொட‌ அத்தே ஞான­சார தேரர் இஸ்­லாத்தை அவ­ம­தித்­த­தாக கூறி அவ­ருக்கு எதி­ராக கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரி­வினால் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி  வழங்கப்படவுள்ளது.

குறித்த வழக்கின் தீர்ப்பு கடந்த 14ஆம் திகதி வழங்­கு­வ­தாக‌ அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அன்றைய தினம்  நாடாளுமன்ற தேர்தல் தினம் என்­பதால் ஒத்திவைக்கப்பட்டது.

‘இஸ்லாம் ஒரு புற்றுநோய்’ என ஞான­சாரதேரர் வெளி­யிட்ட கருத்­துக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் பொரளை ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் ரிகாஸ் முன்­வைத்த முறைப்­பாட்­டுக்கு அமைய, கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் மேல­திக நீதிவான் (3 ஆம் இலக்க அறை) முன்­னி­லையில் வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டது.

இந்த வழக்கில் சாட்சி விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்டு, முறைப்­பாட்­டாளர் தரப்பின் சாட்­சி­யாளர் உள்­ளிட்ட சாட்­சி­யா­ளர்கள் நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில், குறித்த வழக்கை சுமு­க­மாக முடித்­துக்­கொள்ளும் நோக்கில் தனது சேவை பெறுநர் நீதி­மன்றில் பகி­ரங்க மன்­னிப்பு கோர தயா­ராக இருப்­ப­தாக ஞான­சார தேரரின் சட்­டத்­த­ர­ணிகள் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தி­ருந்­தனர்.

இவ்­வா­றான நிலை­யி­ல் குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்­வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வழங்­கு­வ­தாக நீதிவான் அறி­வித்துள்ளார்.

 

 

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...