அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் அவர் பதிவொன்றை விடுத்துள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ஜே. டிரம்ப் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இலங்கை மற்றும் அமெரிக்க மக்களுக்கு நன்மை பயக்கும் எமக்கிடையிலான உறவிலுள்ள பொதுவான இலக்குகளை அடைவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன்.”என்று பதிவிட்டுள்ளார்.