இன நல்லிணக்கத்தை வலுவூட்டும் வகையில் நோயாளர்களுக்கு தேநீர் வழங்கும் ACJU புத்தளம் கிளையினர்..!

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (அ.இ.ஜ.உ.) புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில், புத்தளம் தள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு ஒவ்வொரு நாளும் இலவசமாக தேநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.

இத் திட்டம், நோயாளிகளுக்கு ஊக்கமளிக்கும் நோக்குடனும் சமுதாயத்தின் நலனை முன்னிட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அ.இ.ஜ.உ. புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக். ஜிப்னாஸ் (அல்மிஸ்பாஹி) அவர்களின் தலைமையில் கடந்த 22ஆம் திகதி உத்தியோகபூர்வமாக இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நற்பணியின் மூலம், ஒரு நாளைக்கு 6 கிலோ சீனி மற்றும் 1 கிலோ தேயிலை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் 16 தேநீர் தயாரிக்கும் கேத்தல்களும் புத்தளம் நகரக் கிளையின் தலைவரால் வைத்தியசாலை உயர் அதிகாரிகளிடம் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில், சமூக சேவையாளர் முஹம்மது முஜிபர், புத்தளம் வர்த்தக சங்கத் தலைவர் வை. எம். நிஸ்தார், சஹீரியன்ஸ் மிலேனியம் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் முஹம்மது பஹ்மி, சமூக நலன் விரும்பிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இத்திட்டம் மனிதாபிமானத்தையும் நல்லிணக்கத்தையும் இப்பிரதேசத்தில் பலப்படுத்தும் மற்றொரு முன்மாதிரி நடவடிக்கையாக கருதப்படுகிறது.

 

 

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...