துருக்கி நாட்டின் 101வது ஆண்டு குடியரசு தினம் , இலங்கைக்கான துருக்கி தூதுவர் செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut) தலைமையில் கடந்த 29ஆம் திகதி காலிமுகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள் கலந்துகொண்டார்.
இலங்கைக்கான துருக்கி தூதுவரின் அழைப்பின் பேரில் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது பாரியார் திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது துருக்கி தூதுவர் நீண்டகால இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படும் தனித்துவமான நட்புகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான பிணைப்பை விளக்கினார்.
மேலும், சுமுகமான கலந்துரையாடல்களுக்கு மத்தியில் ஜெனரல் சவேந்திர சில்வா, துருக்கிய மக்களுக்கான இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பற்றி தூதுவர் மற்றும் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இதேவேளை துருக்கிய குடியரசு தினத்தின் நினைவாக ஒக்டோபர் 24ஆம் திகதி காலி முகத்திடல் ஹோட்டலில் ‘துருக்கி சுவைகள்’ என்ற கருப்பொருளில் துருக்கிய உணவுத் திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.