தேசியப்பட்டியல் உறுப்பினராக தன்னைதானே அறிவித்துக்கொண்டமை தொடர்பில் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?

Date:

தேசியப்பட்டியல் விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் ரவிகருணாநாயக்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தன்னைதானே அறிவித்துக்கொண்டமை தொடர்பில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சிக்கு இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ள நிலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினருக்கு ஒரு ஆசனத்தையும்,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பிரிவிற்கு ஒரு ஆசனத்தையும் கட்சி திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை இது குறித்து தீர்மானிப்பதற்காக புதிய ஜனநாயக முன்னணி கூடவிருந்தது.

எனினும் முன்னாள் அமைச்சர் ரவிகருணாநாயக்க தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இரகசிய கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதில் தன்னை கட்சி நியமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கட்சியின் அனுமதியின்றி இந்த கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார்.

ஊடகங்களில் ரவிகருணநாயக்கவின் நியமனம் குறித்த செய்திகள் வெளியானதை தொடர்ந்து ,ஐக்கியதேசிய கட்சியின் உறுப்பினர்கள் ரணில்விக்கிரமசிங்கவுடன் இது குறித்து கடும் கரிசனையை வெளியிட்டுள்ளதுடன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம் இன்று மாலை இடம்பெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...