அண்மையில் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பதுளை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 11 ஆம் திகதி பதுளையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தேர்தல் அமைதி காலத்தில் பதுளை நகரில் அவர் பேரணி சென்று மேலங்கியை கழற்றி எரிந்து பொலிஸாருக்கு சவால் விடுத்த சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சர்வதேச கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸியின் 10 எண் கொண்ட ஜெர்சியை ஒத்த டி-சர்ட்களை அணிந்திருந்த ஹரின் பெர்னாண்டோவின் ஆதரவாளர்களின் அரசியல் பிரச்சாரத்தை நிறுத்த முயன்றதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் பொலிஸார் தலையிட்டு மறைமுகமான தேர்தல் பிரச்சாரமாக கருதிய டி-சர்ட்களை அகற்றுமாறு ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.