நாட்டில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக ஆரோக்கியம் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வித்தியா குமாரிபேல் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த 2023 ஆண்டில் 694 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதமானோர் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எயிட்ஸ் நோயினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கையில், எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் கையடக்கத் தொலைபேசி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் உருவாகும் புதிய உறவு முறைகள் அதிகம் தாக்கம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.