மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து கோர விபத்து: இருவர் பலி!

Date:

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்று பதுளை துன்ஹிந்த பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து இடம்பெற்ற போது, குறித்த பேருந்தில் 41 பேர் வரை பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்விபத்தில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் எனவும், ஏனையவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் கணிசமான எண்ணிக்கையிலான பல்கலைக்கழக மாணவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...