பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழு, இலங்கை மாணவர்களுக்கு ‘அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தின்’ கீழ் உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
அதற்கமைய அடுத்த ஆண்டுக்கான புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் 2025ம் ஆண்டு பெப்ரவரியில் கோரப்படவுள்ளது.
இதேவேளை இவ்வருடத்துக்கான (2024) அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் விருது வழங்கல் நிகழ்வு அக்டோபர் (30) அன்று ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது இலங்கையைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் 200 பேருக்கு புலமைப்பரிசில்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
தற்போது, சுமார் 500 மாணவர்கள் ஏற்கனவே பட்டதாரி, முதுகலை மற்றும் பிஎச்டி அளவில் தங்கள் கல்விப் பட்டங்களைத் தொடர்கின்றனர்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) பாஹீம் உல் அஸீஸ் உரையாற்றும் போது,
இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து இனத்தவர்களும் பாலினம் மற்றும் சமய வேறுபாடின்றி நியாயமான முறையில் இப்புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு மாணவர்களும் பாகிஸ்தானில் தங்கள் உயர்கல்வியினை வெற்றிகரமாக முடித்து இலங்கைக்கு திரும்பியதும், அவர்கள் ஒவ்வொருவரையும் பாகிஸ்தானின் தூதுவர்களாக பாகிஸ்தான் கருதுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இப்புலமைப்பரிசிலானது பாகிஸ்தானின் தலைசிறந்த கவிஞரும் தத்துவயானியுமாக திகழ்ந்த அல்லாமா முஹம்மது இக்பால் அவர்களின் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.