பாவித்த ‘மீன் டின்’ காலணியாக..! : காசா சிறுவர்களின் நிலை!

Date:

கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதியில் இருந்து ஒரு வருட காலத்துக்கும் மேலாக இஸ்ரேல் -காசா போர் உக்கிரமாக இடம்பெற்று வருகின்றது.

காசா சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இஸ்ரேலிய இராணுவ தாக்குதலில் இதுவரை 41,000 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் இறந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சிறுவர்கள்,பெண்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்களும் அடங்குவர்.

சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானவர்கள் உடல் உறுப்புக்களை இழந்து படுகாயமடைந்துள்ளார்கள். காசாவில் வாழும் மக்கள் அனுபவிக்கக்கூடிய துன்பங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.

அந்தவகையில் பலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள 10 வயது சிறுமி அன்றாட வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்கிறாள். பலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த சிறுமி, பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு, புதிய காலணிகளை வாங்க முடியாத சூழ்நிலையில் தன்னுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

‘மீன் டின்’ மூலம் காலணிகளை தயாரித்து,  தனக்கு தேவையான காலணியை உருவாக்கியுள்ளார். இந்த சிறுமியின் முயற்சி சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பிரச்சனைகளை எதிர்கொண்டு வழிவழியாக வாழும் காசா மக்களின் தன்னம்பிக்கை, திறமையை இச்சிறுமி அடையாளமாகக் காட்டியுள்ளார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதோடு, பலர் இதனை பாராட்டிப் பார்வையிட்டனர். இந்த நிகழ்வு, காசா மக்களின் உறுதி, தன்னம்பிக்கை, மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் விதத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...