தீபாவளி பண்டிகைக்காக ரியா என்ற் முஸ்லிம் பெண்ணொருவர் இந்து சகோதர சகோதரிகளுக்கு உணவு மற்றும் புதிய ஆடைகளை வழங்கி மகிழ்வித்துள்ள சம்பவம் சமூக ஊடகங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவின் சென்னையில் பதிவாகியுள்ளது.
ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் ஒரு அழகான நிகழ்வாக, இந்த பெண் இந்து சகோதரிகளுக்காக உணவு, பட்டாசுகள், புதிய ஆடைகளை வழங்கிய நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிகழ்வு, மதங்களின் எல்லைகளை தாண்டி மனிதநேயத்தால் பிணைக்கப்பட்ட ஒற்றுமையின் மாபெரும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இரு மதத்தினரிடையே பரிமாறப்பட்ட இதயம் கனிந்த அன்பும் பரிவும், சமூகத்தில் நல்லிணக்கத்தின் தேவையை வலியுறுத்துகிறது.
இந்த நிகழ்ச்சியால், இரு சமூகங்களின் மக்களிடையே அன்பும் புரிதலும் மேலும் வலுப்பெறுவதுடன், அனைத்து மதங்களைத் தாண்டி ஒருமித்த சமுதாயத்தைக் கட்டியெழுப்புவது எல்லோருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.