மலேசியாவில் கலாநிதி பட்டம் பெற்ற இலங்கையர்கள்: சிறந்த மாணவராக ஆஸாத் ஸிராஸ்!

Date:

மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் 40 வது பட்டமளிப்பு விழாவின் ஒரு பகுதி நேற்று (16) நிறைவுபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவின் போது இலங்கையைச் சேர்ந்த ஆறு பேர் கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டனர்.

கலாநிதி. அரபாத் கரீம் – பேருவளை
கலாநிதி. அஸ்லம் – தெல்தோட்டை
கலாநிதி. ஆஸாத் ஸிராஸ் – புத்தளம்
கலாநிதி. மொஹமட் அப்துல்லாஹ் – புல்மோட்டை
கலாநிதி. இம்தியாஸ் நூர்டீன் – கொழும்பு
கலாநிதி. ஸப்ரீனா – ஏறாவூர்

கலாநிதி. அரபாத் கரீம் பிக்ஹ் மற்றும் உஸுலுல் பிக்ஹ் துறையிலும்
கலாநிதி. அஸ்லம் ரிஸா சமூகவியல் மற்றும் மானிடவியல் துறையிலும்
கலாநிதி. ஆஸாத் ஸிராஸ் உஸுலுத்தீன் மற்றும் மத ஒப்பீட்டாய்வு துறையிலும், கலாநிதி. மொஹமட் அப்துல்லாஹ் இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் துறையிலும், கலாநிதி. இம்தியாஸ் நூர்டீன் வியாபார நிருவாகவியல் துறையிலும், கலாநிதி. ஸப்ரீனா கல்வித் துறையிலும் தமது கலாநிதி பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

மேலும் கலாநிதி ஆஸாத் ஸிராஸ் மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் Faculty of Islamic Revealed Knowledge and Human Sciences இனால் சிறந்த மாணவருக்கான விருது வழங்கி கௌரவிக்கப் பட்டமையும் விஷேட அம்சமாகும்.

தகவல்: மெஹமட் தெளபீக், அரசியல் விஞ்ஞானத் துறை, மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம்.

Popular

More like this
Related

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...