முதலாவது தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்?

Date:

2024 நாடாளுமன்றத் தேர்தலின் முதல் தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க இன்று(14) தெரிவித்தார்.

தேர்தலுக்கான வாக்களிப்பு நாடு முழுவதும் உள்ள 13,314 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் மாலை 4 மணிக்கு நிறைவடையவுள்ளது.

முதலில் தபால் மூலமான வாக்குகள் எண்ணும் பணி மாலை 5 மணிக்குத் தொடங்கும், மேலும் வாக்கு எண்ணும் நிலையங்களின் செயல்திறனைப் பொறுத்து வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும்.

இந்தத் தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், 17,140,354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...