முழு இலங்கையையும் கைப்பற்றிய அநுர: வரலாறு காணாத வெற்றி!

Date:

நடைபெற்று முடிந்த இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் முழுமையான இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி தேசிய மக்கள் சக்தி  159 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி  40 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 257,813 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி (NDF) 500,835 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) 350,429 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 941,983 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.

இதேவேளை வாக்களித்த இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...