பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரான அஷேன் சேனாரத்னவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிலர் ஊழலில் ஈடுபட்டதாக அவர் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் தொடங்கியுள்ளன.
அத்துடன், சம்பந்தப்பட்ட வாக்குமூலத்தைப் பெற, கடந்த 12ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அஷேன் சேனாரத்னவை அழைத்திருந்தனர். எனினும், அவர் அன்றைய தினம் ஆஜராகாததால், மற்றொரு திகதியை கேட்டுள்ளார்.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் இருந்து வேட்புமனு கோரியிருந்த அஷேன் சேனாரத்னவின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் அதிகாரிகளை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தமை குறிப்பிடத்தக்கது.