ரயில் நிலைய அதிபர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

Date:

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு இன்று (04) தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை (05) முதல் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

நடைமுறைகளை மீறி ரயில் நிலைய அதிபர்களை நியமித்தமைக்கு எதிராகவே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கடந்த (30)ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  துறைசார் அமைச்சரின் தலையீட்டினால் இன்று  பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காவிட்டால் நாளை  முதல் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிலைய அதிபர்கள் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...