நாடாளுமன்ற தேர்தலில் சுமந்திரன் தோல்வி!

Date:

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில், யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இம்முறை தோல்வியை தழுவியுள்ளார்.

அதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ள எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில், தேசியப் பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் இன்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்டால் மாத்திரமே தான் நாடாளுமன்றம் செல்வேன் என்றும், கட்சியின் மத்தியகுழுவே தேசியப் பட்டியல் ஆசனத்தை தீர்மானிக்கும் என்றும் கூறியுள்ளார்.

நான் தெரிவாகவில்லை. மக்களின் தெரிவை ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் தொடர்ந்து தமிழரசு கட்சியுடன் சேர்ந்து இயக்குவேன். பொறுப்புடன் மக்களுடன் சேர்ந்து இயக்குவேன்.

 

புதிய அரசியலமைப்புக்கு எமது உதவிகள் தேவைப்பட்டால், அதனை நான் நிச்சயம் செய்வேன். தமிழரசு கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது. நான் மக்கள் மத்தியில் தேசிய பட்டியலில் செல்ல மாட்டேன் என கூறியுள்ளேன்.

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...