வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றிய இரண்டு உத்தியோகத்தர்கள் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இன்று (14) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போது அவர் இதனை தெரிவித்தார்.
அதற்கமைய, கெஸ்பேவ வாக்களிப்பு நிலைய கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 48 வயதான அவர் பயாகல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.
மேலும், நிகவெரட்டிய கொபேகனே வாக்குச் சாவடியில் இன்று (14) காலை பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் (57) திடீரென உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவர் சடலம் தற்போதும் அங்கேயே உள்ளதாகவும் நிக்கவேரட்டிய நீதவான் வருகையை அடுத்து சடலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.