குருநாகல் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிரேஷ்ட நிருவாக சேவை அதிகாரி அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி அவர்கள் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக இன்று (27) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சிக்கு புதியதொரு மாற்றத்தை கொண்டு வருவதாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன அண்மையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.