பரீட்சைகளின் போது வினாத்தாள்கள், உரிய காலத்திற்கு முன்பே வெளியாவதை தடுக்கும் வகையில், விடைத்தாள் வங்கியொன்றை ஸ்தாபிப்பதற்கான புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டிற்குள் இந்த வங்கியை ஸ்தாபிக்க முடியும் என்றும். இதன் மூலம் விடைத்தாள்கள் உரிய காலத்துக்கு முன்பே வெளியிடுதலை தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்புதிய வேலைத் திட்டத்தின் கீழ், வினாத்தாள் தயாரிப்பு நடவடிக்கைகள் நபர்களின் கைகளுக்கு செல்லாமல், கணினி மூலம் மேற்கொள்ளப்பட்டு பரீட்சை விடைத்தாள்கள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது பரீட்சைகள் நடைபெறுவதற்கு முன்பே, பரீட்சை வினாத்தாள்கள் வெளிவரும் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.
நபர்களிடம் வைக்கப்படும் நம்பிக்கை காரணமாகவே இத்தகைய தவறுகள் இடம் பெறுகின்றன. எனினும் எந்த வகையிலும் அது பரீட்சை முறையில் காணப்படும் சிக்கல்கள் அல்ல என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.