தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இன்று (20) காலை கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தலா 05 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க பதுளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பதுளை நகரில் சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்தியதற்காக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) காலை பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.