2024 பொதுத்தேர்தல் அரச, தனியார் ஊழியர்களின் விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

Date:

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அனைத்து அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், நிதி நிறுவன ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதாரண விடுமுறை அல்லது ஊதியக் குறைப்பு இல்லாமல் விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வாக்களிக்க உரிய விடுமுறை வழங்கப்படுவதில்லை என ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு பொதுத்தேர்தலை முன்னிட்டு அனைத்து அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், நிதி நிறுவன ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட காராணங்களுக்கான விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவதற்தான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய அரச அதிகாரிகளின் விசேட விடுமுறை குறித்த நிறுவனங்களின் குறியீடு அத்தியாயம் 12, பத்தி 12/3 இல் கூறப்பட்டுள்ளபடி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்வதற்கு தேவையான ஒரு தொடர்ச்சியான காலம் குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் என்றும், சம்பளம் பிடிப்பு இல்லாமல் விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...