2024 நாடாளுமன்ற தேர்தல்:பிரச்சார நடவடிக்கைள் திங்கள் நள்ளிரவுடன் நிறைவு!

Date:

2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது.

நவம்பர் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் அமைதியான காலம் ஆரம்பமாகிறது. அந்த நேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலானது நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்றும் (07) நாளையும் (08) மேற்கொள்ளப்படவுள்ளன.

ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிக்க முடியாத முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் வாக்காளர்களுக்கும் இன்று தபால் வாக்குகளை அளிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...