அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்: 47வது ஜனாதிபதியாகிறார் டிரம்ப்

Date:

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெற்றிக்கு தேவையான 277 எலக்டோரல் வாக்குகளை டிரம்ப் பெற்ற நிலையில், அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக  டிரம்ப் தேர்வு செய்யப்பட்டதாக ஃபாக்ஸ் நியூஸ் அறிவித்துள்ளது.

சர்வதேசத்தின் சக்தி மிகுந்த நாடான அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனா்.

இதற்கு இடையே நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார்.

அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளுக்கு மேல் வெற்றி பெறும் வேட்பாளரே அதிபராக பொறுப்பேற்பார் என்பது விதியாகும்.

கலிபோர்னியா மாகாணத்திற்கு அதிகபட்சமாக 54 வாக்குகள் உள்ளன. ஒரு மாகாணத்தில் எந்த அதிபர் வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளை பெறுகிறாரோ, அவருக்கு அந்த மாகாணத்தின் அனைத்து எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் வழங்கப்படும். அமெரிக்காவின் ஸ்விங் மாகாணங்களாக அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின், வடக்கு கரோலினா ஆகியவை அழைக்கப்படுகின்றன.

இந்த மாகாணங்களில் கமலா ஹாரிஸ், டொனால்ட் ட்ரம்ப் இடையில் போட்டி கடினமாக இருக்கும் என கூறப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் மேற்கண்ட மாகாணங்களில் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. இழுபறி நிலைய நீட்டித்து வந்தது.

இந்தியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களில் டொனால்ட் டிரம்பிற்கு பின்னடைவு, கமலா ஹாரிஸுக்கு முன்னிலையும் கிடைத்து வந்தது. சில மாகாணங்களில் கமலா ஹாரிஸ் பெரும்பான்மை விகிதத்தில் வெற்றியும் பெற்றார்.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் இறுதியான நிலையில், டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றுள்ளார். தனது போட்டியாளர் கமலா ஹாரிஸை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று டொனால்ட் டிரம்ப் 2 வது முறையாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...