அமெரிக்க அரசாங்கத் திறன் துறைக்கு எலான் மஸ்க், விவேக் ராமசாமி தெரிவு!

Date:

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ம் திகதி பதவி ஏற்க உள்ள நிலையில் தனது அமைச்சரவையில் செயல்பட போகும் செயலாளர்கள் பெயர்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார்.

அமெரிக்காவில்  அமைச்சர் பதவி என்ற பெயரில் பொறுப்புகள் வழங்கப்படாது. மாறாக அதே மத்திய அமைச்சரின் அதே பொறுப்புகளோடு அதிகாரத்தோடு செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இவர்கள் ஜனாதிபதி மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு. செனட் தரும் அடையாள ஒப்புதலுடன் செயலாளர்கள் ஆவார்கள்.

இந்நிலையில் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் அரசாங்கத் திறன் துறையை (D.O.G.E.) வழிநடத்துவார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

DOGE என்பது இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவிய அணுகுண்டை உருவாக்கும் அமெரிக்காவின் திட்டத்தைக் குறிப்பிடுவதாகும்.

முன்னதாக டிரம்ப் தனது பிரச்சாரத்தின் போதே இந்த நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி இருந்தார்.

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...