இலங்கையில் WhatsApp பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Date:

சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீர் ஹுஸைன் அவர்களுடைய வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக முக்கியமான பிரமுகர்களுடைய வாட்ஸ்அப் இலக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே ஊடகவியலாளர் அமீர் ஹுஸைன் அவர்களுடைய இலக்கத்தில் இருந்து வரும் அழைப்புக்கள் செய்திகள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில்  வாட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவல் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கையில் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத ஊடுருவல் அதிகரித்து வருவதாகவும், இணைய குற்றவாளிகள் verification codes மூலம் மக்களின் கணக்குகளை அணுகுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வாட்ஸ்அப் பயனர்கள் எதிர்பாராதவிதமாக verification codeகளை பெறுவதும், சைபர் குற்றவாளிகள் தொடர்புடைய codeகளை பெறுவதற்கு நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் போல் பாவனை செய்வதும் கண்டறியப்பட்டுள்ளது.

verification codes மூலம் பயனரின் வாட்ஸ்அப்   கணக்குகளை பெறுவதற்கு மோசடி செய்பவர்கள் வேலை செய்து வருவதாகவும், உங்கள் கணக்கிற்கு பணம் அனுப்ப தயாராக இருப்பதாகவும், அந்த codeகள் கையடக்கதொலைபேசிக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், Zoom ஊடாக பங்குபற்றுவதற்கான codeகள் உள்ளிடுமாறு வெளிநாட்டவர்களிடம் இருந்து பெறப்படும் செய்திகளுக்கு பதிலளிப்பதன் மூலம் இலங்கையர்கள் இந்த மோசடிகளில் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இது தொடர்பில் பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...