அத்துடன், அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் இராஜதந்திர பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள மேலும் பல நபர்களை மீள அழைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தூதரக அதிகாரி -லலித் சந்திரதாச, சீனாவின் சங்காய் நகரில் உள்ள தூதரக அதிகாரி – அனுர பெர்னாண்டோ, இந்தியாவின் சென்னையில் உள்ள துணை உயர்ஸ்தானிகர் – டி.வெங்கடேஸ்வரன், சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள தூதரக அதிகாரி – எஸ்.எம்.ஏ.எஃப். மௌலானா, அமெரிக்காவின் வோசிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் அமைச்சர் – நிசான் மாணிக் முத்துகிருஸ்ணா, அமெரிக்காவின் வோசிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் – தாரக திசாநாயக்க, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் மூன்றாவது செயலாளர் – சஞ்சய் புஞ்சிநிலமே, ரோம் தூதரகத்தின் – மெல்கி சந்திமா பெரேரா, கென்பரா உயர்ஸ்தானிகரகத்தின் – தினுகா கார்மெலின் பெர்னாண்டோ பாரிஸ் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் – சஹஸ்ர பண்டார, மொஸ்கோ தூதரகத்தின் அமைச்சர் – பந்துல டி சொய்சா, புதுதில்லி உயர் ஸ்தானிகராலயத்தின் அமைச்சர் ஆலோசகர் – அன்வர் முகமது ஹம்தானி, பெய்ரூட்டில் மூன்றாவது செயலாளர் – பிரியங்கிகா திஸாநாயக்க, அங்காராவில் இரண்டாவது செயலாளர் – யஸ்மின் ஹில்மி முகமது, நெதர்லாந்தில் உள்ள ஹேக் தூதரகத்தில் ஆலோசகர் – அஸ்வினி ஹபாங்கம, மற்றும் சுவீடனின் ஸடொக்ஹோமின் அமைச்சர் ஆலோசகர் – ஜனக ரணதுங்க ஆகியோரே திருப்பியழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்று 15 நாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் மீள அழைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 15 பேருக்கும் வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார சேவையுடன் தொடர்புபடாத பதவிகளில் பணியாற்றிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் இவ்வாறு மீள அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க ஐக்கிய நாடுகள் சபையின் நிவ்யோர்க்கிற்கான வதிவிட பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசரான மொஹான் பீரிஸ்,
பிரித்தானிய உயர்ஸ்தானிகரான முன்னாள் வௌிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம,
இந்திய உயர்ஸ்தானிகரான முன்னாள் தூதுவர் ஷெனுகா செனவிரத்ன,
அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரான, வௌிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வர,
ஜப்பானுக்கான தூதுவர் ரொட்னி பெரேரா,
மலேசியாவிற்கான உயர்ஸ்தானிகரான முன்னாள் விமானப்படை தளபதி சுமங்கல டயஸ்,
நேபாளத்திற்கான தூதுவர், முன்னாள் விமானப்படை தளபதி சுதர்ஷன பத்திரன,
கியூபாவிற்கான தூதுவர், முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன,
பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகர் முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன,
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான தூதுவர் உதய இந்திரரத்ன,
கென்யாவிற்கான உயர்ஸ்தானிகர் பி.கனநாதன்,
சீஷெல்ஸ் உயர்ஸ்தானிகர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவியின் சகோதரரான ஸ்ரீமால் விக்கிரமசிங்க,
ஈரானுக்கான தூதுவர் மொஹமட் ஷாஹிட் ஆகியோர் மீள அழைக்கப்பட்டுள்ளனர்.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத்தின் ஆலோசனையின் பேரில் வெளிநாட்டு சேவைக்கு பொருத்தமானவர்கள் எதிர்காலத்தில் அந்தந்த பதவிகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.