அக்கரைப்பற்றைச் சேர்ந்த சமூக சேவையாளர் எம்.ஏ. அமீர்தீன் அவர்கள், கிழக்கு மாகாண சபையின் ‘மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தின்’ (Provincial Bureau of Pre-School Education) தவிசாளராக இன்று கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர முன்னிலையில் பதவியேற்கிறார்.
அமீர்தீன் அவர்களின் நியமனம் பற்றிய அறிவிப்பு, நேற்று அக்கரைப்பற்றில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பரவலாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.
அவரது கடந்த அனுபவங்களும், இதே பொறுப்பில் இருந்த அவரது திறமையான செயல்பாடுகள் காரணமாகவும் பல தரப்பட்டோரின் வேண்டுகோள் மற்றும் ஆதரவின் பின்னணியில் அவருக்கு இந்த நியமனம், வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.