சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை ஒத்திவைப்பு

Date:

டிசம்பரில் நடைபெறவிருந்த இலங்கை சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சையை பிற்போடுவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இன்று (28) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட புள்ளியியல் மற்றும் புள்ளியியல் அதிகாரிகளுக்கான முதலாவது திறன் பரீட்சை (2016/24) ஒரே திகதிகளில் நடத்தப்படாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பான இரண்டு பரீட்சைகளும் டிசம்பர் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த நிலையில், அது தொடர்பான பரீட்சைகள் அந்தத் திகதிகளில் நடைபெறாது.

நாட்டில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படுவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

 

 

 

 

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...