சர்வதேச அரபு மொழி தினத்தை அனைத்து முஸ்லிம் பாடசாலைகளிலும் அனுஷ்டிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

Date:

சர்வதேச அரபு மொழித் தினத்தை சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் அனுஷ்டிப்பதற்கு தேவையான வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

முஸ்லிம் மாணவர் மத்தியில் அரபு மொழிக் கல்வியை பிரயோக ரீதியில் செயற்படுத்தவும், அரபு மொழி ஆற்றலை விருத்தி செய்யவும், அரபு மொழியுடன் தொடர்பான பாரம்பரிய, கலாச்சார அழகியல் அம்சங்களை இனங்கண்டு பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்படவும், பொருளாதார, சுற்றுலாத்துறை மற்றும் சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தவும் அரபு மொழி தினம் முக்கியத்துவம் பெறுகிறது.

இதன்படி 14.12.2024 ஆம் திகதி முதல் சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை ஆரம்பிப்பதால் 18.12.2024 ஆம் திகதிய சர்வதேச அரபுமொழித் தினத்தை 21.11.2024 ஆம் திகதி அனுஷ்டிக்குமாறும் பாடசாலையின் அன்றாட கல்வி நடவடிக்கைகளுக்கு எவ்வித தடைகளும் ஏற்படாத வகையில் சர்வதேச அரபு மொழித் தினத்தை அனுஷ்டிக்க பொருத்தமான வேலைத்திட்டமொன்றை ஏற்பாடு செய்து மாணவர்கள் மத்தியில் அரபு மொழி சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...