தபால் நிலையங்களில் தேங்கியுள்ள மூன்றரை இலட்சம் வாக்காளர் அட்டைகள்!

Date:

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளில் மூன்று இலட்சத்து 40 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் இன்று (14) வரை தபால் நிலையங்களில் தேங்கிக் கிடந்துள்ளன.

வாக்காளர்கள் உரிய முகவரிகளில் இருந்து வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்தமை, வீடுகளில் இல்லாமை, வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை போன்ற காரணங்களினால் குறித்த வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை என்று தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அவ்வாறான நிலையில் உரிய வாக்காளர் அட்டை கிடைக்காத வாக்காளர்கள் இன்றைய தினம் தங்கள் பிரதேச தபால் அலுவலகங்களுக்கு வந்து வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

எனினும் இன்று மாலை வரை குறித்த வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...