Prima U15 Sri Lanka Youth League 2024 மூலம் அடுத்த தலைமுறை இலங்கை கிரிக்கெட் வீரர்களை வலுவூட்டும் பிறீமா

Date:

நம்பிக்கைக்குரிய இளம் கிரிக்கெட் வீரர்களை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காணும் நோக்கத்துடனான இலங்கை கிரிக்கெட்டின் தேசிய பாதை திட்டத்தின் கீழ், 15 வயதுக்குட்பட்ட Sri Lanka Youth League (SLYL) (இலங்கை இளைஞர் லீக்) 2024 கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை கிரிக்கெட் (SLC) நிறுவனத்துடன் கைகோர்த்து Prima Group Sri Lanka நிறுவனம் அனுசரணை வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள மெர்கன்டைல் கிரிக்கெட் சங்கத்தில் (MCA), ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மற்றும் பிறீமா குழுமம் நடத்திய கூட்டு ஊடக மாநாட்டில் வைத்து இந்த கூட்டாண்மை தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

Prima Group Sri Lanka நிறுவனமானது, Prima U15 SLYL போட்டித் தொடரின் பெருமைமிக்க உத்தியோகபூர்வ அனுசரணையாளராக 2007 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகிறது. இது ஆயிரக்கணக்கான இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மாவட்டங்களையும், அதனைத் தொடர்ந்து அவர்களது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான களமாக விளங்கி வருகின்றது.  கடந்த காலத்திலும், தற்காலத்திலும் தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல திறமையான கிரிக்கெட் வீரர்கள் இந்த போட்டித் தொடரிலிருந்து தமது அறிமுகத்தைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

50 ஓவர்கள் கொண்ட Prima U15 SLYL 2024 போட்டித் தொடரானது, மாவட்ட ரீதியான போட்டிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இளம் துடுப்பாட்ட வீரர்களை உள்ளடக்கி, நவம்பர் 21 ஆம் திகதி முதல் கொழும்பில் உள்ள பல்வேறு மைதானங்களில் இடம்பெறவுள்ளன. கொழும்பு பல்கலைக்கழக மைதானம், மெர்கன்டைல் கிரிக்கெட் சங்க மைதானம், தேர்ஸ்டன் கல்லூரி மைதானம், றோயல் கல்லூரி மைதானம் ஆகிய மைதானங்களில் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.

கொழும்பு வடக்கு (Colombo North), கொழும்பு தெற்கு (Colombo South), தம்புள்ளை (Dambulla), காலி (Galle), கண்டி (Kandy) ஆகிய ஐந்து மாகாண அணிகள் இப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 28ஆம் திகதியும், இறுதிப் போட்டி நவம்பர் 30ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா இங்கு குறிப்பிடுகையில், “எமது வருடாந்த மேம்பாடு தொடர்பான நாட்காட்டியில் இது ஒரு முக்கியமான போட்டித் தொடராகும். இது எமது எதிர்கால கிரிக்கெட் வீரர்களின் சந்ததியினரைப் கண்டறிவதற்கான களம் என்பதோடு, இதற்காக பிறீமா குழுமம் வழங்கி வரும் தொடர்ச்சியான பங்காளித்துவத்தை நாம் மதிக்கின்றோம்.” என்றார்.

Prima Group Sri Lanka குழுமத்தின் நிறுவனமான Ceylon Agro Industries பொது முகாமையாளர் சஜித் குணரத்ன இங்கு குறிப்பிடுகையில், “Prima Under-15 Sri Lanka Youth League போட்டித் தொடரானது எதிர்கால கிரிக்கெட் ஜாம்பவான்களை உருவாக்கும் ஒரு அடைகாக்கும் பெட்டகமாகும்.

அவர்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், விளையாட்டின் மீதான அவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதன் மூலம், அவர்களின் பயணத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.

இவ்வருட போட்டித் தொடரை ஆரம்பிக்கும் இவ்வேளையில், திறமை, விளையாட்டுப் பண்புகள், போட்டியின் தளராத மனப்பான்மை ஆகியவற்றுடன் ஒப்பிட முடியாத பல்வேறு விடயங்களைக் காண நாம் ஆவலுடன் இருக்கிறோம். இந்த இளம் திறமையாளர்களின் நலனுக்காக முதலீடு செய்வதன் மூலம், அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்கள் பெரும் கனவுகளை காணவும் அதனை அடைவதற்காக சிறந்த வெளிப்பாட்டை வழங்குவதற்கும் ஊக்குவிக்கப்படுவதன் மூலம், அவர்கள் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மாற்றியமைப்பார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் கனிஷ்ட கிரிக்கெட் வீரர்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கி, 15 வயதுக்குட்பட்ட Sri Lanka Youth League தொடரை வெற்றிகரமாக நடாத்துவதில் இலங்கை கிரிக்கெட் எம்முடன் இணைந்து வழங்கி வரும் தொடர்ச்சியான பங்காளித்துவத்திற்காக, Prima Group Sri Lanka சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

Prima U15 SLYL 2024 போட்டித் தொடரானது இலங்கையில் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய இளைஞர் கிரிக்கெட் போட்டித் தொடர்களில் ஒன்றாகும். இது, இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் அவர்களுக்கான இடத்தை பெறுவதற்குமான ஒரு தளத்தை வழங்குகிறது.

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...