திகாமடுல்ல மாவட்ட தேசிய பட்டியல் எம்.பி நியமனம்: NPPஇன் கொள்கை கடந்த மனித நலனுக்கு ஓர் எடுத்துக்காட்டு

Date:

ஒரு முக்கிய பிரச்னையில் ஜே.வி.பினரின் உள்ளத்தைப் புரிந்து கொள்வது என்பது என்னால் ஒரு போதும் முடியாத ஒரு சமாச்சாரம்.

எனது மிக நீண்ட நாள் நண்பரோடு பேசிக் கொண்டு இருந்தேன். அவர் பேராதெனிய பல்கலைக்கழகத்திலிருந்த நாட்களில் இருந்தே ஜேவிபி செயற்பாட்டாளர். திகாமடுல்லயில் முஸ்லிம் வாக்குகள் கணிசமாய் அளிக்கப்பட்டும் யாரும் எம்.பி ஆகாத கதையை விபரித்தேன்.

இந்த சோகத்தைக் கேட்டுவிட்டு மக்களுக்குப் பைத்தியம் என்ற பொருள்படும் ‘ உன் ட பிஸ்ஸுனே’ என்ற ஆக்மார்க் வசனத்தோடுதான் தொடங்குவான் என்று நினைத்தேன்.

ஆனால் அவனோ ‘ அப்படி என்றால் கட்டாயம் தேசிய பட்டியல் ஒன்று கொடுக்க வேண்டும்’ என்றான். எனக்கு சுத்தமாய்ப் புரியவில்லை.தோற்ற ஆட்களுக்குக் கொடுப்பது கொள்கை முரண் கிடையாதா என்று கேட்டேன்.

இத்தனை இனவர்க்க முரண்பாடுகளும் பிரதேச அரசியல் குழி பறிப்புக்களும் கொண்ட இடத்தில் கட்டாயம் கட்சி சார்பாய் முஸ்லிம் பிரநிதித்துவம் ஒன்று அமைய வேண்டும். மற்றது நாம் இன்னும் அம்மக்களை நெருங்க வேண்டும். கொள்கையை எப்போதும் கட்டிக் கொண்டு அழ முடியாது என்றான்.

இவன் சும்மா சொல்கிறான். கட்சி மேலிடம் இப்படி ஒரு தீர்மானத்தை எடுக்காது என்று நினைத்து இருந்தேன். ஆனால் ஜே.வி.பிக்காரர்கள் சொல்லி வைத்த மாதிரி ஒரே ரகத்தில் யோசிக்கிறார்கள். இதோ திகாமடுல்லவுக்கு ஒரு தேசியப் பட்டியல் வழங்கப்பட்டு இருக்கிறது.

நன்றி: Zafar Ahmed
Facebook page

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...