சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் எஸ்.எம.சிப்லி மற்றும் செயலாளர் யு.உபைதுல்லா ஆகியோர் இணைந்து குறித்த கோரிக்கை கடிதத்தை வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்களிடம் இன்று (26) கையளித்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
மாணவர்கள் மழைக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருவதனால் ஏனைய மாவட்டங்களில் விடுமுறை வழங்கியது போன்று வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.