மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து கோர விபத்து: இருவர் பலி!
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்று பதுளை துன்ஹிந்த பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து இடம்பெற்ற போது, குறித்த பேருந்தில் 41 பேர் வரை பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவ்விபத்தில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் எனவும், ஏனையவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் கணிசமான எண்ணிக்கையிலான பல்கலைக்கழக மாணவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.