புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளை குறைக்க அரசு திட்டம்..!

Date:

நாடாளுமன்றத்தின் அதிக செலவைக் குறைக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதனை நடைமுறைபடுத்த  இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை அனுபவித்து வந்த வாகன கொடுப்பனவு, ஓய்வூதியம், வீடமைப்பு கொடுப்பனவு மற்றும் ஏனைய நிதி சலுகைகளை குறைப்பதற்கான பிரேரணையை இந்த குழு நாடாளுமன்றமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் வருடாந்த வரவுசெலவுத் திட்டம் 4-5 பில்லியன் ரூபா என்ற வரம்பில் உள்ளது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளுக்காக மட்டும் ஒரு பில்லியன் ரூபா செலவிடப்பட்டும் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர் ஒருவருக்கு சட்டரீதியாக 7 விசேட சலுகைகள் உள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சு: காசாவில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் நரம்பு மண்டலத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்!

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும்...

22 ஆவது திருத்தம் மீதான எதிர்ப்பு: ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்.

உயர்நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் நோக்கில்...

முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை...

விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு!

பொரலஸ்கமுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்லன்வில ராஜமஹா விகாரையில் நடைபெறும் எசல மகா...