தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அவசரநிலைகளை நிவர்த்தி செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், முப்படைகள் மற்றும் இலங்கை காவல்துறையினரும் இதற்காக இணைந்து செயற்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த ஒரு பேரிடர் சூழ்நிலையையும் கையாள்வதற்கான சிறப்பு மையம் இன்று (12) முதல் 16ஆம் திகதி வரை 5 நாட்களுக்கு செயல்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.