காசாவில் நிலவும் மனிதாபிமான பேரழிவை தடுப்பதற்காக உடனடி மற்றும் நீடித்த போர்நிறுத்தம் அவசியம் என துருக்கி ஜனாதிபதி ரசப் தயிப் அர்தூகான் வலியுறுத்தியுள்ளார்.
19வது ஜி20 உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ஆரம்பமாகியது. .
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சர்வதேச நாடுகளில் தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர்.
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி,பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டின் முக்கிய விவாத பொருளாக மூன்று விஷயங்கள் உள்ளன.1. பசி மற்றும் சமூக பாகுபாடுகளுக்கு எதிராக போராடுதல் 2. ஆற்றலை மாற்றுதல் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 3. உலகளாவிய நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம் என்பன.
இம்மாநாட்டில் பசி மற்றும் சமூக பாகுபாடுகளுக்கு எதிராக போராடுதல் எனும் தலைப்பில் உரையாற்றிய துருக்கி ஜனாதிபதி,
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட முற்றுகையின் விளைவாக 96% மக்களுக்கும் சுகாதாரமான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர் இதுவரை காசாவில் பட்டினி பேரிடர் நிலை உயர்ந்துவிட்டதாகவும் அவர் அவர் கூறினார்.
இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்ட பலஸ்தீனிய நிலப்பரப்பில் மனிதாபிமான நெருக்கடி குறித்து கவனத்தை ஈர்த்த அர்தூகான் , அதன் மக்கள்தொகையில் 96 சதவீத மக்கள், ஆரோக்கியமான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காதவர்கள்”.
காசாவில் பஞ்சத்தின் ஆபத்து பேரழிவு நிலைகளை எட்டியுள்ளது. அதிகரிக்கும் தாக்குதல்கள் மற்றும் குளிர்காலம் நெருங்கி வருவதால், காசாவில் உள்ள மக்களின் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.
துருக்கி இதுவரை காசாவுக்கு 86,000 டன் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதாகவும், லெபனானுக்கு 1,300 டன்களுக்கு மேல் உதவி அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகில் ஒவ்வொரு 10 பேரில் ஒருவர் பசியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2030 நிலையான மேம்பாட்டு இலக்குகள் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை என அவர் கவலை தெரிவித்தார்.