முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை அரசாங்கம் மாற்றாது என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் அல்லது பௌத்தம் தொடர்பான எந்தவொரு சட்டமும் அந்தந்த மதத் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே திருத்தப்படும் என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாட்டில் அவர் கூறினார்.
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை மாற்றுவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் கேள்வியொன்றுக்கு பதிலளித்தார்.
இத்தருணத்தில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை என்றார்.