சீரற்ற காலநிலை: யாழில் 2634 குடும்பங்களைச் சேர்ந்த 9404 பேர் பாதிப்பு..!

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 2634 குடும்பங்களைச் சேர்ந்த 9404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 48 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

சங்கானை பிரதேச செயலக பிரிவில் 573 குடும்பங்களைச் சேர்ந்த 2335 பேரும், யாழ். பிரதேச செயலக பிரிவில் 470 குடும்பங்களைச் சேர்ந்த 1520 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 266 குடும்பங்களைச் சேர்ந்த 932 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 371 குடும்பங்களைச் சேர்ந்த 1462 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 416 குடும்பங்களைச் சேர்ந்த 599 பேரும், காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 141 குடும்பங்களைச் சேர்ந்த 508 பேரும் பாதிக்கப்பட்டனர்.

தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 93பேரும், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 79 குடும்பங்களைச் சேர்ந்த 294 பேரும், நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 93 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 115 குடும்பங்களைச் சேர்ந்த 385 பேரும் உடுவில் பிரதேச செயலக பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும் நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேரும் வேலணை பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எழு பேரும் கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேரும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

 

 

 

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...