உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Date:

எதிர்வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு  அனைத்து பரீட்சை நிலையங்களிலும் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்து அறிவுறுத்தலானது தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (National Dengue Control Unit) விடுக்கப்பட்டுள்ளது

பரீட்சை நிலையங்களுக்கு நுளம்பு விரட்டிகளை கொண்டு வருமாறு பரீட்சார்த்திகளுக்கு சமூக ஆலோசகர் லஹிரு கொடித்துவக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பேரிடர்களின் காரணமாக பரீட்சைக்கு இடையூறுகள் ஏற்படாதவாறு பேரிடர் மேலாண்மை மையம் உரிய அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதி நிறைவடையும் இதற்காக 2,312 பரீட்சை நிலையங்கள் தயார்ப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

உயர்தரப்பரீட்சைக்கு 333,185 பரீட்சார்த்திகள் தேற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...