நாட்டில் நிலவும் மோசமான வானிலை: முன்பள்ளி விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

Date:

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக வடமத்திய மாகாணத்தில்  பதிவு செய்யப்பட்ட 1,480 முன்பள்ளிகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்று (27) முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாகாண ஆரம்பக் குழந்தைப் பருவ அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிலந்த ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாசவின்  பணிப்புரைக்கு அமைய வடமத்திய மாகாணத்தில் உள்ள 94 முஸ்லிம் மற்றும் தமிழ் பாடசாலைகள் இம்மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மூடப்படும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா  மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...