வெளியானது தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர்கள்

Date:

பொதுத் தேர்தல் பெறுபேறுகளுக்கமைய தேசிய மக்கள் சக்திக்குக்   கிடைக்கப்பெற்ற 18 தேசிய பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்கவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிமல் ரத்நாயக்க, ராமலிங்கம் சந்திரசேகர், கலாநிதி அநுர கருணாதிலக்க, பேராசியரியர் உபாலி பன்னிலகே, எரங்க உதேஷ் வீரரத்ன, ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அருண ஜயசேகர, கலாநிதி ஹர்ஷன சூரியபெரும, ஜனித ருவான் கொடிதுவக்கு, ஸ்ரீ குமார ஜயகொடி, நஜித் இந்திக்க, சுகத் திலகரத்ன, லக்மாலி காஞ்சனா ஹேமரத்ன, சுனில் குமார கமகே, காமினி ரத்நாயக்க,

மற்றும் பேராசிரியர் ருவான் சந்திம ரணசிங்க, சுகத் வசந்த டி சில்வா, அபுபக்கர் ஆதம் பாவா மற்றும் ரத்நாயக்க ஹெட்டிகே உபாலி சமரசிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...